×

உ.பி. மதுராவில் உள்ள மசூதியில் ஆய்வு செய்ய ஆணையம் அமைத்த உத்தரவுக்கு தடை: முத்தரசன் வரவேற்பு

சென்னை: உத்தரபிரதேசம் மதுராவில் உள்ள மசூதியில் ஆய்வு செய்ய ஆணையம் அமைத்த உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு முத்தரசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பக்கத்தில் கூறியதாவது, மதுராவில் உள்ள ஷாஹி ஈத்கா மஜித் இருக்கும் இடம் இந்துக்களின் நம்பிக்கை கடவுள் கிருஷ்ணன் பிறந்த பூமி என அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 17 முறையீட்டு மனுக்கள் விசாரணையில் உள்ளன, விசாரித்து வருகிறது.

இந்த முறையிட்டு மனுக்களை விசாரித்து வரும் அலகாபாத் உயர்நீதி மன்றம் ஷாஹி ஈத்கா மஜித் வளாகத்தை ஆய்வு செய்து, நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்க மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழு அமைப்பது என்று ஜனவரி 4 ஆம் தேதி உத்தரவிட்டது. இதன் மீது ஈத்கா மஜித் கமிட்டியின சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டை விசாரித்த விசாரித்த உச்ச நீதிமன்றம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஆய்வுக் குழுவுக்கும், ஆய்வு நடவடிக்கைக்கும் இடைக்கால தடை விதித்து 16.01.2024 ஆம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தடை நாட்டில் ஏற்படும் விபரீத விளைவுகளை தடுத்து, நல்லிணக்கம் பேணும் சக்திகளுக்கு ஊக்கம் தருவதாக அமைந்துள்ளது என்பதால் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு உச்ச நீதிமன்றத்தின் தடை உத்தரவை வரவேற்பதுடன் 1991 ஆம் ஆண்டு வழிபாட்டு இடங்கள் (சிறப்பு விதிகள்) சட்டத்தை பயன்படுத்தி 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதி வழிபாட்டு இடங்கள் எந்தெந்த நிலையில் இருந்ததோ அதே நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

The post உ.பி. மதுராவில் உள்ள மசூதியில் ஆய்வு செய்ய ஆணையம் அமைத்த உத்தரவுக்கு தடை: முத்தரசன் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : U. B. ,Madura ,Mutharasan ,Chennai ,Madura, Uttar Pradesh ,Shahi ,Eitga ,Majid ,Hindus ,U. B. Ban on Commission ,
× RELATED தென் இந்தியாவில் உ.பி மக்களையும்,...